/

விருதுநகர் பகுதியில்  வெவ்வேறு இடங்களில் 3 பேர் தற்கொலை

விருதுநகர் பகுதிகளில் வெவ்வேறு இடங்களில் நடந்த சம்பவங்களில் இளைஞர் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:17 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் பகுதிகளில் வெவ்வேறு இடங்களில் நடந்த சம்பவங்களில் இளைஞர் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

தீக்குளித்து இளைஞர் சாவு: விருதுநகர் அருகே மிளகாய்பட்டியைச் சேர்ந்த பாண்டியனின் மகன் ஈஸ்வரன்(18). இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர், அதோடு குடிப்பழக்கமும் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு மதுபோதையில் இருந்த ஈஸ்வரனை தந்தை கண்டித்தாராம்.இதனால் மன உளைச்சல் அடைந்த ஈஸ்வரன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தாராம். இதை அக்கம் பக்கத்தினர் பார்த்து பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதையடுத்து விரைந்த வந்து ஈஸ்வரனை உயிருக்கு ஆபத்தான நிலையில் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில், அங்கு தீவிரமாக சிகிச்சை அளித்த நிலையிலும் பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாராம். இது தொடர்பாக வச்சக்காரப்பட்டி காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

விஷம் குடித்து முதியவர் சாவு:

விருதுநகர் அருகே அல்லம்பட்டி வேலாம்பூர் தெருவைச் சேர்ந்தவர் ரத்தினம்மாளின்(49) கணவர் தியாகராஜன்(60). இவருக்கு அடிக்கடி வயிற்று ஏற்பட்டு வலியால் அவதிப்பட்டு வந்தாராம். அதோடு, மருந்து மாத்திரையும் சாப்பிட்டு நிலையிலும் குணமாகவில்லையாம். இதனால் மன உளைச்சல் அடைந்த தியாகராஜன் வியாழக்கிழமை மாலையில் விளைநிலத்தில் பயிருக்கு தெளிப்பதற்காக வாங்கி வைத்திருந்த விஷமருந்தை அருந்தினாராம். இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த தியாகராஜனை விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை நள்ளிரவில் உயிரிழந்தாராம். இது தொடர்பாக விருதுநகர் கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அடையாளம் தெரியாத முதியவர் சாவு:

விருதுநகர் அருகே துலுக்கப்பட்டி- ஆவுடையாபுரம் சாலையோரத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்த கிடப்பதாக பட்டாசு ஆலை தொழிலாளர்கள் அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வச்சக்காரப்பட்டி காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, போலீஸார் விரைந்து பார்க்கையில் 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாதவர் என்பதும்,  அதே சமயம் இப்பகுதியில் கடந்த 15 நாள்களாக பிச்சை எடுத்து உணவு உண்டு வந்ததாகவும் விசாரணையில் தெரிவந்தது. இது தொடர்பாக துலுக்கப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.